ஒரு பெரிய குரு இருந்தார்.முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை ஒரு பிரசங்கம் செய்யக் கூப்பிட்டிருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க . அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அந்த நாள் பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைந்து போயிட்டாங்க . குரு வந்த போது அங்கே யாரும் இல்லை. பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனமில்லை. ' என்னப்பா பண்ணலாம் ? ' னு கேட்டார். ' அய்யா ! நான் குதிரைக்காரன்.... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க . ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க . நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப்போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி , அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்.'என்றான். பளார்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு 'சபாஷ்' போட்டுட்டு , அவனுக்கு மட்டும் தன் பிரச்சங்...